சேறல் - மரபாண்மை மற்றும் சூழலியல் கலை இலக்கிய ஆய்வு நடுவத்தின் முதல் ''இயற்கை மரபு நடை'' தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி வட்டம், சுந்தராஜபுரம் - பழையக்கோட்டை ஊரில் அமைந்துள்ள ஜக்கம்மாள் கரடு மலையில் 07.06.2026, ஞாயிறு அன்று காலை நடைப்பெற்றது. இந்நிகழ்வில் ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர் சி.மாணிக்கராஜ், பறவையியலாளர் கண்மருத்துவர் தி. பத்ரி நாராயணன், கண்மருத்துவர் ஹீமோக்ளோபின், தாவரவியல் ஆய்வாளர் நே. கார்த்திகேயன், கா. சக்திவேல், தொல்லியல் ஆர்வலர் அருண், சேறல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் தவம், கேசவன், தமிழ்தாசன் ஆகியோர் பங்கெடுத்தனர். வரலாற்று நோக்கிலும், பல்லுயிரிய நோக்கிலும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக ஜக்கம்மாள் கரடு விளங்குகிறது. நுண்கற்காலத்தைச் சேர்ந்த கற்கருவிகளும், பெருங்கற்காலத்தைச் சேர்ந்த பானையோடுகளும் இம்மலையை சுற்றிக் கிடைத்துள்ளன. ஜக்கம்மாள் கரடு மலையின் வடக்குத் திசையில் உள்ள பளியன் புடவில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த வெள்ளைநிற பாறை ஓவியங்கள் காணப்படுகிறது. இம்மலையின் மேற்குத்திசை புடவில் 1000 ஆண்டுகள் ப...
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், மகிபாலன்பட்டி ஊருக்கு இயற்கை மரபு நடை பயணமாக 21.06.2026 அன்று காலை சேறல் மரபாண்மை சூழலியல் ஆய்வு நடுவம் சார்பாக சென்று இருந்தோம். உலகப் புகழ்ப் பெற்ற வரிகளான 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என பாடிய சங்க காலப் புலவர் கணியன் பூங்குன்றனார் மகிபாலன்பட்டி என இன்று அழைக்கப்படுகின்ற ஊரில் பிறந்ததாக கருதப்படுகிறது. தொல்லியல் ஆய்வாளர் மற்றும் தொல்மரபுக் குழு நிறுவனர் கா.காளிராசா, தாவரவியல் ஆய்வாளர் நே.கார்த்திகேயன், மகிபாலன்பட்டி முன்னாள் ஊராட்சிமன்றம் தலைவர் விஜய பாஸ்கர், பறம்புமலை பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் கர்ணன், பாண்டியன் சரஸ்வதி பொறியியல் கல்லூரி மாணவர்கள், கா. சக்திவேல், சேறல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் தவம், கேசவன், தமிழ்தாசன் ஆகியோர் இந்நிகழ்வில் பங்கெடுத்தனர். செட்டிநாட்டு பாணியின் கட்டப்பட்ட நகரத்தார் வீடுகளின் அழகியத் தோற்றம் நம்மை மகிபாலன்பட்டிக்குள் வரவேற்றன. பூங்குன்றம் (எ) மகிபாலன்பட்டி: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், மகிபாலன்பட்டி ஊராட்சியில் அமைந்துள்ள திருப்பூங்குன்றமுடைய நாயனார் குடைவரைக்கோயில் வெளிப...
Comments
Post a Comment