சேறல் - மரபாண்மை மற்றும் சூழலியல் கலை இலக்கிய ஆய்வு நடுவத்தின் முதல் ''இயற்கை மரபு நடை'' தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி வட்டம், சுந்தராஜபுரம் - பழையக்கோட்டை ஊரில் அமைந்துள்ள ஜக்கம்மாள் கரடு மலையில் 07.06.2026, ஞாயிறு அன்று காலை நடைப்பெற்றது. இந்நிகழ்வில் ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர் சி.மாணிக்கராஜ், பறவையியலாளர் கண்மருத்துவர் தி. பத்ரி நாராயணன், கண்மருத்துவர் ஹீமோக்ளோபின், தாவரவியல் ஆய்வாளர் நே. கார்த்திகேயன், கா. சக்திவேல், தொல்லியல் ஆர்வலர் அருண், சேறல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் தவம், கேசவன், தமிழ்தாசன் ஆகியோர் பங்கெடுத்தனர். வரலாற்று நோக்கிலும், பல்லுயிரிய நோக்கிலும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக ஜக்கம்மாள் கரடு விளங்குகிறது. நுண்கற்காலத்தைச் சேர்ந்த கற்கருவிகளும், பெருங்கற்காலத்தைச் சேர்ந்த பானையோடுகளும் இம்மலையை சுற்றிக் கிடைத்துள்ளன. ஜக்கம்மாள் கரடு மலையின் வடக்குத் திசையில் உள்ள பளியன் புடவில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த வெள்ளைநிற பாறை ஓவியங்கள் காணப்படுகிறது. இம்மலையின் மேற்குத்திசை புடவில் 1000 ஆண்டுகள் ப...
Comments
Post a Comment